உக்ரைன் விமான விபத்து குறித்து தெளிவான விசாரணை வேண்டும் என்று கனடபிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தெரிவித்துள்ளார்.
ஜனவரி 8ஆம் தேதி உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான போயிங் 737 விமானம் 180 பயணிகளுடன் ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து புறப்பட்டது. ஆனால், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தெளிவான தகவல்கள் வெளிவராமல் மர்மமாகவே இருந்து வருகிறது.
இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், எங்கள் சொந்த உளவுத்துறை ஆதாரங்களின்படி உக்ரைன் விமானம் ஈரான் வான்பரப்பில் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இது தற்செயலாகவும் நடந்திருக்கலாம். இந்த விபத்து குறித்து தெளிவான விசாரணை வேண்டும்” என்றார்.