அஜித் நடித்த வலிமை திரைப்படத்தின் கிளைமாக்ஸ் ஜாக்கிசான் திரைப்படத்தை போல் உள்ளதாக வீடியோ வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் அண்மையில் வலிமை திரைப்படம் வெளியானது. அஜித்தின் திரைப்படங்கள் கடந்த இரண்டரை வருடங்களாக வெளியாகாத நிலையில் தற்போது வெளியாகியது. இதை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். படம் பல விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பைக் ரேஸ், சண்டை காட்சிகள் உள்ளிட்டவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.
https://twitter.com/GokulKu94690981/status/1499798773710557185?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1499798773710557185%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fcinema%2Fcinema-news%2F2022%2Fmar%2F05%2Fvideo-based-on-ajith-kumar-vinoth-yuvan-shankar-raja-valimai-spreading-on-social-media-3802875.html
இந்நிலையில் படத்தின் கிளைமாக்ஸில் வில்லன், அஜித்தின் குடும்பத்தை தலைகீழாக தொங்க விட்டிருப்பார். இந்தக் காட்சியானது 2014ஆம் வருடம் வெளிவந்த “போலீஸ் ஸ்டோரி” திரைப்படத்தை ஞாபகப் படுத்துவதாக இருக்கின்றது. இரண்டு காட்சியையும் ஒப்பிட்டு வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. இதனைத் தொடர்ந்து அஜீத் ரசிகர்கள் “எம்ஜிஆர் காலத்திலிருந்து தற்போது வரை பெரும்பாலான திரைப்படங்களுக்கு இதுதான் கிளைமேக்ஸாக இருக்கின்றது” என பதிலளித்து வருகின்றனர்.