Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உடல்நலக்குறைவால் அவதி…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வானவன்மகாதேவி கிராமத்தில் சுரேஷ்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் பிரியா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த பிரியா வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |