இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி துப்புரவு ஆய்வாளர் உயிரிழந்த நிலையில் வாலிபர் படுகாயம் அடைந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் வசித்து வந்த பாலு (32) சேந்தமங்கலம் பேரூராட்சியில் துப்புரவு ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சண்முகவடிவு (46) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று பாலு நாமக்கல் சென்றுவிட்டு இரவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அக்கியம்பட்டி பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்து கொண்டிருந்த வடுகப்பட்டியை சேர்ந்த கமல்நாத்(19) என்பவரின் இருசக்கர திடீரென நேருக்கு நேர் மோதி உள்ளது.
இந்த கோர விபத்தில் பாலு மற்றும் கமல்நாத் இருவரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி உள்ளனர். இதனை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் பாலு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தற்போது கமல்நாத்திற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து சேந்தமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.