Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள்

மோசடி வழக்கு… லிங்கா பட ஹீரோயினுக்கு பிடிவாரண்ட்… கோர்ட் அதிரடி… இந்தி திரையுலகமே அதிர்ச்சி…!!!

லிங்கா திரைப்படத்தில் நடித்த சோனாக்ஷி சின்கா மீது பிடிவாரண்ட் தந்து கோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் தமிழில் ரஜினிக்கு ஜோடியாக லிங்கா திரைப்படத்தில் நடித்திருந்தார். டெல்லியில் சென்ற 3 ஆண்டுகளுக்கு முன்பு விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். அதற்காக சோனாக்ஷிக்கு 4 தவணையாக 37 லட்சம் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் சோனாக்ஷி இறுதியாக அந்த நிகழ்ச்சிக்கு செல்ல மறுத்துவிட்டார். மேலும் பணத்தை அவர் திருப்பி தரவில்லை.

சோனாக்ஷி மீது உத்திரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளன.போலிஸ், சோனாக்ஷி உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. வழக்கை விசாரித்த உத்திரப்பிரதேச மொராதாபாத் நீதிமன்றம் மூன்று பேரும் வெளியே வரமுடியாத மாதிரி பிடிவாரண்ட் தந்து உத்தரவிட்டு இருக்கின்றன. இது இந்தி சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

Categories

Tech |