ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்கு வருகிற மார்ச் 31ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் முக்கியமான ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. UIDAI எனப்படும் ஆதார் ஆணையத்தால் ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் வருமான வரித் துறையால் பான் கார்டு வழங்கப்படுகிறது. ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வருகிற மார்ச் 31-ஆம் தேதி தான் ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைப்பதற்கான கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடைசி தேதி நெருங்கி வருகின்ற நிலையில் அனைவரும் ஆதார் பான் கார்டுகள் எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆதார் மற்றும் பான்கார்டுடுகளை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அது எவ்வாறு என்பதை காண்போம்.
*வருமானவரி இணையதளத்துக்கு(https://incometaxindia.gov.in /) செல்லவும்.
* அதில் உள்ள ‘Link Aadhaar’ பகுதியை அழுத்தவும்.
* புதிதாக திறக்கும் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்யவும்.
* Link now பட்டனை கிளிக் செய்யவும்.
* உங்கள் ஆதார் – பான் கார்டுகள் இணைக்கப்பட்டுவிடும்.