மயிலாடுதுறையில் கனமழை காரணமாக இன்று (மார்ச்.7) 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் மயிலாடுதுறையில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.