பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1800 கிலோ ரேஷன் அரிசி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கள்-பள்ளப்பட்டி சாலையில் வட்ட வழங்கல் அதிகாரி ஜெயபாண்டியன் தலைமையிலான வருவாய்த்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது அந்த பகுதியில் 1800 கிலோ ரேஷன் அரிசியை மூட்டைகளில் கட்டி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த மூட்டைகளை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கிடங்கிருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதி பொதுமக்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் ரேஷன் கடைகளில் 5 முதல் 7 ரூபாய் வரை பணம் கொடுத்து அரிசியை வாங்கி பொதுமக்களிடம் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. மேலும் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்த்துறையினர் எச்சரித்துள்ளனர்.