Categories
அரசியல் மாநில செய்திகள்

“சின்ன தவறு நடந்தாலும் நடவடிக்கை எடுப்பேன்”…. முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை….!!!!

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் சிலையை திறந்து வைத்தார். அதன்பிறகு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியதால் தான் மக்கள் நம்மை உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற செய்துள்ளனர். திமுக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி கண்டது யாருமே எதிர்பாராத ஒன்று.

இந்த வெற்றியை காண கலைஞர் இல்லை என்பது வருத்தமாக இருந்தாலும் அவருடைய சிலையை திறந்து வைத்தது மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. திமுகவினர் கண்ணியம், கடமை, கட்டுப்பாட்டை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பேரறிஞர் அண்ணா சொன்னது போல திமுக மக்களோடு மக்களாக இருந்து சேவையாற்றும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களுடைய நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக ஒரு சிறு தவறு கட்சியில் நடந்தால் கூட கடுமையான நடவடிக்கை எடுப்பேன். கருணாநிதி மேயர் என்பது பதவி அல்ல பொறுப்பு என்று சுட்டிக்காட்டியுள்ளார். மக்களோடு மக்களாக நின்று திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் பணியாற்ற வேண்டும். அதேபோல் உள்ளாட்சித் தேர்தலில் கட்சி கட்டுப்பாட்டை மீறியவர்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுப்பது உறுதி. இது மிரட்டல் கிடையாது. மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |