Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

ஆழ்ந்த காற்றழுத்தம் தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் தென் மேற்கு திசையில் தமிழகம் கடற்கரையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மேலும் வலுவிழக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

மயிலாடுதுறையில் கனமழை எதிரொலியால் இன்று (திங்கட்கிழமை) 1-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி புதுக்கோட்டை திருவப்பூர், முத்துமாரியம்மன் கோவில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |