Categories
மாநில செய்திகள்

#JUSTIN: “விருதுநகரில் மெகா ஜவுளி பூங்கா”…. முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

இந்தியாவிலேயே முதன் முறையாக தூத்துக்குடியில் ரூபாய் 1,000 கோடி மதிப்பீட்டில் 1,150 ஏக்கர் பரப்பு அளவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச அறைகலன் பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச்.7) அடிக்கல் நாட்டினார். முன்னதாக தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ரூபாய் 1,000 கோடியில் 1,150 ஏக்கர் பரப்பு அளவில் “சர்வதேச அறைகலன் பூங்கா” (பர்னிச்சர் பார்க்) அமைக்கப்படும் என்று கடந்த வருடம் சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இப்பூங்கா அமைப்பதற்கு சிப்காட் நிறுவனத்தின் சார்பாக தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 1,150 ஏக்கர் நிலம் சரிசெய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் பர்னிச்சர் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையிலுள்ள மாணிக்கம் மகால் திருமண மண்டபத்தில் இன்று (மார்ச் 7) காலை 10 மணி முதல் நடைபெற்று வருக்கிறது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, விரைவில் சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

வணிகர்கள், உழவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரிடம் நிதிநிலை எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படும். விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசுடன் இணைந்து மெகா ஜவுளி பூங்கா அமைய இருக்கிறது. பெல்ஜியம் நிறுவனம் ரூ.450 கோடி ரூபாய் முதலீட்டில் ஜன்னல் கதவுகள் தயாரிப்பில் ஈடுபட உள்ளது. கடல்நீரை குடிநீராக்க சிப்காட் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |