டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு அரப்போர் இயக்கம் 2 வாரங்களில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டெண்டர் முறைகேடு வழக்கு புலன் விசாரணையை 10 வாரங்களில் முடிக்க முன்பே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவையும் எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மேல் முறையீடு செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு விசாரித்தது கவனிக்கத்தக்கது.