கள்ளிக்குடி அருகில் புள்ளிமான் இறந்து கிடந்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் – விருதுநகர் நான்கு வழி ரோட்டில் கள்ளிக்குடி அருகிலுள்ள சிவரக்கோட்டை நான்குவழி ரோட்டில் மருதுபாண்டி சிலை அருகில் நான்கு வயது உடைய ஆண் புள்ளிமான் இரண்டு கால்களும் உடைந்த நிலையில் இறந்து கிடந்துள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் உசிலம்பட்டி வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் இறந்து கிடந்த மானின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர். அதன்பின் இறந்த புள்ளிமான் சாலையை கடக்கும் போது வாகனத்தில் அடிபட்டு இறந்துள்ளதா அல்லது வயல்வெளியில் வைக்கப்பட்ட கம்பி வேலியில் சிக்கி இறந்துள்ளதா என்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.