கையில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்தின் பேரில் நின்றுகொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் மாரிசெல்வம் என்பதும் அரிவாளை கையில் வைத்து கொண்டு சுற்றித் திரிந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மாரிசெல்வத்தை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.