Categories
மாநில செய்திகள்

OMG: புகை மண்டலமாக மாறிய மெரினா…. இதுதான் காரணமா?….!!!!

சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சென்னை மெரினா கடற்கரைக்கு மக்கள் அதிக அளவில் வருகை புரிவார்கள். கொரோனா தொற்று காரணமாக சென்னை மெரினா கடற்கரை செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், சுற்றுலா பயணிகள் மீண்டும் சென்னை மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில்சென்னை மெரினா கடற்கரை சாலை, காமராஜர் சாலை மற்றும் சர்வீஸ் சாலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக காற்று அடித்ததால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் அந்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Categories

Tech |