உக்ரைன் மீது ரஷ்யா பயங்கரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனுக்கு மருத்துவ படிப்பு படிக்க சென்ற ஏராளமான இந்திய மாணவர்கள் தூதரகத்தின் உதவியால் இந்தியாவிற்கு திரும்பி வருகின்றனர். அந்த வகையில் இன்று தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த 5 மாணவ, மாணவிகள் விமானம் மூலம் தூத்துக்குடி வந்து சேர்ந்தனர்.
பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் உக்ரைன் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இந்தியாவிலேயே படிப்பை தொடர நடவடிக்கை தேவை என்று கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.