பார்களை 6 மாதங்களுக்குள் மூடவேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் மேல் முறையீடு செய்துள்ளது.
6 மாதங்களுக்குள் தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைக்கு சொந்தமான பார்களை மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. கடந்த 2019-21 வருடத்துக்கான பார் உரிமம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் சில்லறை விற்பனை கடைகளில் இருந்து வாங்கப்படும் மதுவை வீட்டிலேயோ அல்லது வேறு தனியார் இடத்திலேயோ தான் அருந்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி டாஸ்மாக் சார்பாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் டாஸ்மாக் கடை அருகில் பார்களுக்கு உரிமம் வழங்க டாஸ்மாக் நிறுவனத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.