கோடை வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக காவல்துறையினருக்கு சிறப்பான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த வருடம் கோடை வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்காக போக்குவரத்து காவல்துறையினருக்கு வெயிலை சமாளிப்பதற்காக சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இவர்களுக்கு நீர்மோர், தொப்பி, கண்ணாடி, எலுமிச்சைச்சாறு போன்றவைகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் இந்தப் பணியை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா தொடங்கி வைத்தார்.
இவர் போக்குவரத்து காவல் துறையினருக்கு கையுறை, முககவசம், சானிடைசர், தொப்பி, கருப்பு கண்ணாடி, நீர் மோர், எலுமிச்சை சாறு போன்றவற்றை வழங்கினார். இந்த விழாவில் போக்குவரத்து துறை இன்ஸ்பெக்டர் வசந்த், மேற்கு காவல்துறை இன்ஸ்பெக்டர் செல்வராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.