தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மித்திராவயல் கிராமத்தில் நல்லசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அய்யப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அய்யப்பன் நேற்று நண்பர்களுடன் விளையாட செல்லுவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அய்யப்பன் விடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அய்யப்பனை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு கண்மாயில் அய்யப்பன் இறந்து மிதந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அய்யப்பனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.