சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வந்த வாலிபர்கள் கைது செய்ய கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் கிராமத்தில் மினி வேன் மற்றும் கார் வந்து நீண்ட நேரமாக நின்றுள்ளது . இதனை பார்த்து சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வேன் மற்றும் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனைகள் சட்டவிரோதமாக 4 டன் ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இவர்களை கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.