Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்று இல்லாத புதுச்சேரி…. மக்களுக்கு நிம்மதி செய்தி…..!!!!!

நாடு முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் முதன் முறையாக புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று யாருக்கும் கண்டறியப்படவில்லை. ஏற்கனவே உள்ள 28 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |