Categories
தேசிய செய்திகள்

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு….. 7 நாட்கள் சிபிஐ காவல்…. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தேசிய பங்குச் சந்தையான என்.எஸ்.சியின் முன்னாள் இயக்குனராக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணன். இவர் தேசிய பங்குச்சந்தை தொடர்பான தகவல்களை தனி நபர்களிடம் மற்றும் தரகர்களிடம் பெரும் பணத்தை பெற்றுக்கொண்டு, பகிர்ந்து உள்ளார். மேலும் தேசிய பங்குச்சந்தை சர்வர்களை பிற நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதித்தது, உள்ளிட்ட ஏராளமான ஊழல் முறைகேடுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதில் இவரது கூட்டாளியான ஆனந்த் சுப்பிரமணியனும் ஈடுபட்டுள்ளார்.

மேலும் இருவர் மீதும் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி கடந்த 2015ஆம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வருகிறது. இதனைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு முதல் சிபிஐயும் விசாரணையில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இருவர் மீதும் இதுவரையிலும், விரைவான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அண்மையில் ஆனந்த் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று சித்ரா ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ அதிகாரிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவை , 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால் சிபிஐ, சித்ரா ராமகிருஷ்ணாவை  14 நாட்கள் காவலில் எடுக்க அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளது. இதனையடுத்து இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் 7 நாட்கள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.

Categories

Tech |