Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மீன்பிடிக்க சென்ற சிறுவர்கள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மீன்பிடிக்க சென்ற சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியைடுத்த வல்லம் பகுதியில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8 வயதுடைய மோகன்ராஜ் என்ற மகன் இருந்துள்ளான். அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் என்பவருக்கு 2 வயதுடைய தாஸ் என்ற மகன் இருந்துள்ளான். இந்த 2 சிறுவர்களும் அந்தப் பகுதியில் இருக்கும் தாங்கல் ஏரிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு பெற்றோர்கள் குழந்தைகளை தேடி சென்றுள்ளனர்.

அப்போது ஏரியில் மோகன்ராஜ், தாஸ் இருவரும் சடலமாக மிதந்துள்ளனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் குழந்தைகளை மீட்டுள்ளனர். இதுகுறித்து வளத்தி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிறுவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |