தி.மு.க கவுன்சிலர்கள் 2 பேர் அ.தி.மு.க கட்சியில் இணைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் பகுதியில் 4-வது வார்டு கவுன்சிலராக சகாய சுஜிதாவும், 5-வது வார்டு கவுன்சிலராக சுரேஷ் குமாரும் உள்ளனர். இவர்கள் தி.மு.க கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்.
இந்நிலையில் சகாய சுஜாதாவும், சுரேஷ்குமாரும் அ.தி.மு.க கட்சியில் இணைந்துள்ளனர். இவர்கள் கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் முன்னிலையில் அ.தி.மு.க கட்சியில் இணைந்தனர். அப்போது ஊராட்சி துணைத் தலைவர் விஜயகுமார், ஒன்றிய கழக செயலாளர் ஜெசீம் ஆகியோர் உடனிருந்தனர்.