கடல் நீர் உப்பளங்களில் புகுந்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா பாதிப்பு, பருவநிலை மாற்றம் காரணமாக உப்பளங்கள் மூடப்பட்டிருந்தது. தற்போது பருவநிலை சூழல் நன்றாக இருப்பதால் மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்கப்பட்டது. ஆனால் கடல் நீரில் சீற்றம் ஏற்பட்டதால் உப்பளங்களில் தண்ணீர் புகுந்ததது. இதனால் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த உப்பளங்கள் நீரில் மூழ்கி நாசமானதால் உப்பு உற்பத்தி பாதிக்கபட்டது. எனவே உற்பத்தியாளர்கள் மிகுந்த மன வேதனையில் உள்ளனர்.