மார்த்தாண்டம் அருகே 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் பகுதியில் வசித்து வரும் மாணவி ஒருவர். அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியின் ஆன்லைன் வகுப்பிற்காக பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். ஆனால் அந்த மாணவி கல்விக்காக செல்போனை பயன்படுத்தாமல் தவறாக பயன்படுத்தியுள்ளார்.
அதாவது சேலம் மாவட்டம் எடப்பாடி மேட்டு தெருவில் வசித்து வரும் கலையரசன் என்ற வாலிபருடன் வாட்ஸ்அப்பில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஐ.டி.ஐ படித்த கலையரசன் தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். மாணவியிடம் அடிக்கடி வாட்ஸ்அப் மூலம் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.அதனைத் தொடர்ந்து மாணவியிடம் ஆசை வார்த்தைகளை கூறி நான் உன்னை பார்க்க விரும்புவதாக கூறியுள்ளார் அதற்கும் அந்த மாணவி சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சேலத்திலிருந்து மார்த்தாண்டம் வந்த கலையரசன் அந்த பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கி மாணவியை தொடர்பு கொண்டு அவரின் வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து இரவு நேரத்தில் அடிக்கடி சென்று சில்மிஷம் செய்து வந்துள்ளார்.ஒரு கட்டத்தில் மாணவியை பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரமும் செய்தாக கூறப்படுகிறது.
இதேபோன்று நேற்று இரவில் மாணவியின் காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்த போது, அப்பகுதியில் இருந்த மக்கள் கலையரசன பார்த்துள்ளனர். உடனே அவரை பிடித்து தர்மஅடி கொடுத்து விசாரணை செய்துள்ளனர்.அப்போது அவர் சேலத்தில் இருந்து வந்துள்ளதாகவும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார் .இச்சம்பவம் குறித்து மாணவியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் பேரில் போலீசார் கலையரசன் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.