Categories
மாநில செய்திகள்

SHOCK NEWS: தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு…. பொருட்கள் விநியோகத்தில் முறைகேடு….. பரபரப்பு தகவல்….!!!!

தமிழக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு பயோமெட்ரிக் முறை அறிமுகபடுத்தப்பட்டு, அதன் வாயிலாக கைரேகை பதிவு செய்யப்பட்டு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக ரேஷன் கார்டுகளில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர் மட்டுமே இந்த பயோ மெட்ரிக் இயந்திரத்தில் கைரேகை வைத்து அத்தியாவசியப் பொருட்களை பெற முடியும். இந்நிலையில் பயோமெட்ரிக் இயந்திரம் சரியாக வேலை செய்வதில்லை என்று அண்மைகாலமாக புகார்கள் எழுந்து வருகிறது. அதிலும் குறிப்பாக வயது முதிந்தவர்கள் ரேகைகளில் தேய்வு மற்றும் சுருக்கங்கள் ஏற்படுவதால் அவர்களின் கைரேகை பதிவாகுவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டது.

அவ்வாறு கைரேகை பதிவாகாததால் ரேஷன் அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் அவதிப்பட்டனர். இது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது கைரேகை பதிவாகாத ரேஷன் அட்டைதாரர்களுக்கு உரிய பதிவேடுகளில் பதிவுகளை மேற்கொண்டு, அதன்பின் பொருட்களை வழங்க அரசு அறிவுறுத்தியது. அதுமட்டுமல்லாமல் வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களால் கடைக்கு வந்து பொருட்களை வாங்க முடியாத நிலையில், மற்றொருவரின் உதவியுடன் அதாவது பிராக்ஸி முறையில் பொருட்களை பெறுகின்றன.

இந்நிலையில் ஆவடி, பெரம்பூர், திருவொற்றியூர், வில்லிவாக்கம், சோழிங்கநல்லூர், மதுரவாயல், மயிலாப்பூர் போன்ற 7 மண்டலங்களில் உள்ள 15 கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பணியாளரால் குடும்ப அட்டைதாரர்களுக்கு ப்ராக்ஸி முறையில் பட்டியலிட்டு வழங்காமல் கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட ரேஷன்கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |