Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சுபநிகழ்ச்சிகள் சென்ற பெற்றோர்…. மகனுக்கு நேர்ந்த கொடுமை…. போலீஸ் விசாரணை….!!

அண்ணனை கொலை செய்த தம்பியை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாவாலி பகுதியில் ராமசாமி-பாக்கியம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு லெக்கன் , அழகு முனீஸ்வரன் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ராமசாமி மற்றும் பாக்கியம் உறவினர் வீட்டின்  சுபநிகழ்ச்சிக்கு சென்று விட்டனர். இதனால்  வீட்டில் தனியாக இருந்த லெக்கண் தம்பியான அழகுமுனீஸ்வரனுடன் சேர்ந்து   மது குடித்துவிட்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென இருவருக்கும் இடையே   தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அழகுமுனீஸ்வரன்   அருகில் இருந்த  மண்வெட்டியை கொண்டு  லெக்கனை  சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த லெக்கனை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே லெக்கன்  பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து பாக்கியம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அழகு முனீஸ்வரனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |