ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணையை ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் நேற்று (மார்ச்.7) மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில் உடல் நலக்குறைவால் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்கள் சந்தித்து பேசியபோது, உண்மையாகவே உடல் நலக்குறைவு காரணமாகத்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இறந்தார். இதனிடையில் ஜெயலலிதாவின் மரணம் அரசியலாக்கப்பட்டு உள்ளது.
எந்த முடிவாகினும் ஜெயலலிதாவே எடுத்து இருப்பார். தேவையின்றி எங்கள் சித்தி மீது பழிபோட்டு எதோ பண்ணிப் பார்த்தார்கள், ஆனால் அது நடக்கவில்லை. இதன் காரணமாக மக்கள் வரிப்பணம் தான் வீணாகி உள்ளது. கொரோனா தொற்று காரணமாக 2 வருடங்களாக நிர்வாகிகளை சந்திக்க முடியவில்லை. மற்றவர் யாருக்கும் நம்மால் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே போராட்டங்களை கூட தவிர்த்துள்ளோம்.
தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலைகளில் இறங்கி இருக்கிறோம். முதற் கட்டமாக வருகிற 18ஆம் தேதி முதல் கட்சி பொறுப்பாளர்கள் தமிழ்நாடு முழுவதும் சென்று கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர். அதன்பின் மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து மார்ச் 14ஆம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். உக்ரைனில் உள்ள மாணவர்கள் மீட்பு நடவடிக்கைகளில் மத்திய அரசானது முறையாக செயல்படுகிறது. தி.மு.க-வுக்கு வாக்களிக்க கூடாது என்று மக்கள் முடிவெடுப்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.