பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் தேவ் ராம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலாவதி என்ற மனைவியும், கிரண் குமாரி (19) என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தேவ் ராம் தன் மகளுக்கு நாடி சர்மா என்பவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். ஆனால் இவரது மகள் கிரண் குமாரி அதே பகுதியை சேர்ந்த வேறொரு நபரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் தனது தந்தையிடம் நாடி சர்மாவை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று கிரண் குமாரி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கோபமடைந்த தேவ் ராம் தனது 2 சகோதரர்களுடன் சேர்ந்து தனது மகளை கட்டிவைத்து கழுத்தை அறுத்துள்ளார். அப்போது இதனை தடுக்க முயன்ற தனது மனைவியையும் தேவ் ராம் தாக்கியுள்ளார். இதையடுத்து வலியால் அலறித்துடித்த கிரண் குமாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக கலாவதி கொடுத்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.