Categories
உலக செய்திகள்

“நிறுத்துங்கள் போரை”…. ரஷ்யாவில் வெடிக்கும் போராட்டம்…. ஆயிரக்கணக்கானோர் கைது….!!!

ரஷ்யாவின் தாக்குதலை எதிர்த்தும் புதின் அரசுக்கு எதிராகவும் ரஷ்யாவில் பல்வேறு  நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

ரஷ்யா உக்ரைன் மீது 12வது நாளாக முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனின் தலைநகரான கீவை கைப்பற்று வதில் ரஷ்யா ஆர்வம் காட்டி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் கடுமையாக அதிகரித்து உள்ளது. இந்த போரில் ரஷ்யா,  உக்ரைன் படைகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்தப் போரினை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகிறது.

இதற்கிடையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதில் ரஷ்யாவில் நடத்த படும் பெரும்பாலான போராட்டங்கள் போலீசாரால் கட்டுப்படுத்தபட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ரஷ்யாவின் தாக்குதலை எதிர்த்தும் புதின் அரசுக்கு எதிராகவும் ரஷ்யாவில் 56 நகரங்களில் நடைபெற்ற போராட்டங்களை போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டோர் 4,366 பேரை போலீசார் கைது செய்தனர். பின்பு அவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து ரஷ்யா இன்று உக்ரைனின் கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல் ஆகிய தலைநகரங்களில் தற்காலிகமாக போரை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் பத்திரமாக வெளியேறு வதற்காகவும்  மனிதாபிமான உதவிகள் வழங்கும் அடிப்படையிலும் இந்த போர் தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |