Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இணையத்தில் வெளியான ஆபாச படம்…. குழந்தை நல பாதுகாப்பு அமைப்பினர் புகார்…. போக்சோவில் கைதான பூசாரி….!!

குழந்தைகளின் ஆபாச படங்களை இணையத்தில் வெளியிட்ட கோவில் பூசாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினர் இணையத்தளத்தின் முகநூல் பக்கத்தில் குழந்தைகளின் ஆபாச படங்கள் வருவதாகவும் அது ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து தொடர்ந்து பதிவு செய்யப்படுவதாகவும் கடந்த 2-ஆம் தேதி புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் அந்த குறிப்பிட்ட எண் யாருடையது என்று விசாரணை நடத்தியதில் அந்த செல்போன் எண் மடத்துக்குளம் பகுதியில் வசிக்கும் வைத்தியநாதன் என்பவருக்கு சொந்தமானது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் வைத்தியநாதனை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் வைத்தியநாதன் வெங்கிட்டாபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வருவது தெரியவந்துள்ளது. மேலும் வைத்தியநாதன் போலியான முகநூல் பக்கம் தொடங்கியதுடன், கடந்த 2020- ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் குழந்தைகளின் ஆபாச வீடியோவை பதிவேற்றம் செய்து வந்தது தெரிய வந்துள்ளது. இதனைதொடர்ந்து காவல்துறையினர் வைத்தியநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |