Categories
மாநில செய்திகள்

உக்ரைன்-ரஷ்யா போர்…. சமாதான புறாவாக மாறிய பள்ளி மாணவிகள்…. வைரல்!!!!

ரஷ்யா-உக்ரேன் இடையேயான போரை நிறுத்த வலியுறுத்தி, தனியார் பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.  

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலானது தொடர்ந்து 12வது நாளாக நடைபெற்று வருகின்றது. இப்போரை நிறுத்துவதற்காக பல்வேறு சமாதானப் பேச்சுவார்த்தைகள்  நடைபெறும் நிலையில், தற்போது போரானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவிகள் ஒன்றாக இணைந்து சமாதான சின்னமான ‘புறா’ போன்ற வடிவத்தில் அமர்ந்திருந்து, ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த வலியுறுத்தி, விழிப்புணர்வு ஒன்று ஏற்படுத்தி உள்ளார்கள்.

மேலும் இந்த விழிப்புணர்வில்  சுமார் 500க்கும் மேற்பட்ட அப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். அதனைத் ‘தொடர்ந்து சமாதானமும் நிலவட்டும்’ என்ற வாசகத்தை கூறியப்படி,கையில் வைத்திருந்த சமாதானப் புறாக்களை வானில் பறக்க விட்டுள்ளனர்.

அதன்பின் இதுகுறித்து, இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் கூறியுள்ளதாவது, பெண் குழந்தைகளுக்கு எதிராக தொடர்ந்து அநீதிகள் நடந்து வரும் நிலையில், அதனை தடுக்க வலியுறுத்தியும் மற்றும் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எனவே அதை நிறுத்தி சமாதானத்தை வலியுறுத்த வேண்டும் என்னும் நோக்கிலும் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்களை ஈடுபடுத்தி உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |