Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “அறிமுகமில்லாதவரிடம் பேச வேண்டாம்”… வீண் செலவுகள் ஏற்படும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று அறிமுகம் இல்லாதவரிடம் பொது விஷயத்தை பற்றி பேச வேண்டாம். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்புகளை பின்பற்ற வேண்டும். காலக்கெடு தவறிய உணவுகளை  உண்ண வேண்டாம். கவனக்குறைவால் எந்த ஒரு பொருளையும் நீங்கள் வாங்க வேண்டாம். இன்று பணவரவு ஓரளவு சிறப்பாக தான் இருக்கும். உழைப்பு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும்.

உடல் ஆரோக்கியம் கொஞ்சம் பாதிக்கப்படக் கூடிய சூழல் இருக்கும். பயணங்களால் வீண் செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகள் மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது ஆலோசித்து செய்வது ரொம்ப நல்லது.

இன்று மாணவர்களுக்கு பாடங்களை மிகவும் கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெறுவதற்கு உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீலத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். கருநீலம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடியஅளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள்.உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோசங்கள் அனைத்தும் நீங்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் கருநீல நிறம்

Categories

Tech |