Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

விறகு வெட்ட சென்ற மூதாட்டி…. சிறுவர்களின் கொடூர செயல்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

மூதாட்டியை கொலை செய்து நகையை பறித்து சென்ற 3 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆர்ப்பாக்கம் கிராமத்தில் சுசிலா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் பொன்னுசாமி இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். அவருக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் சுசிலா விறகு வெட்டுவதற்காக அப்பகுதியில் உள்ள ஒரு ஓடை பகுதிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சுசிலா தலையில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சுசிலாவின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

இதுகுறித்து அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மூதாட்டி கொலை வழக்கில் அந்த கிராமத்தில் வசிக்கும் 17 வயதுடைய 3 சிறுவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் 3 சிறுவர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த இடத்தில் சுசிலா விறகு வெட்டிக்கொண்டிருந்த போது அங்கு வந்து சிறுவர்கள் மூதாட்டியை தாக்கியதுடன் அவர் காதில் அணிந்திருந்த 1\2 பவுன் கம்மலையும் திருடி சென்றது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த சுசிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 3 சிறுவர்களையும் கைது செய்ததோடு அவர்களை கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Categories

Tech |