Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “உபரி பண வருமானம் கிடைக்கும்”.. அடுத்தவர் பொறாமைப்படகூடும்..!!

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று நல்ல செயல்கள் அனுகூல பலன்களை பெற்றுக்கொடுக்கும். இஷ்ட தெய்வ அருளால் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும். மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டியிருக்கும்.

விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். உங்களை கண்டும் உங்கள் வளர்ச்சியை கண்டும் அடுத்தவர் பொறாமைப்படகூடும். எதைப்பற்றியும் கவலை இல்லாமல் முன்னேறிச் செல்வதற்கு நீங்கள் வழியைத் தேடிக் கொள்ளுங்கள். அதேபோல அக்கம்பக்கத்தில் பேசும் போது எந்தவித சலனமும் இல்லாமல் எந்த ஒரு வாக்கு வாதங்களும் இல்லாமல் பேசுவது ரொம்ப சிறப்பு.

மனதை நீங்கள் தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு பிரச்சனையும் நீங்கள் சுமுகமாகவே தீர்த்துக் கொள்வீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |