மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கண்டியங்கொல்லை தெற்கு தெருவில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான பாண்டியராஜன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் சிவகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த லாரி மோதிவிட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவக்குமார் மற்றும் பாண்டியராஜன் ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநரான ராஜா என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.