புள்ளி மான் இறந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள சிவரக்கோட்டை நான்குவழிச்சாலை மருதுபாண்டியர் சிலை அருகில் இரண்டு கால்களும் ஒடிந்த நிலையில் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் 4 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்கிய புள்ளிமான் இறந்ததா? அல்லது கம்பி வேலியில் சிக்கி இறந்து விட்டதா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.