Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெற்றோர் இடையே ஏற்பட்ட பிரச்சனை…. மகள் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சினையில்  பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள  மேல புத்தநெறி கிராமத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 11-ஆம் வகுப்பு படிக்கும் சிவரஞ்சனி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் மாரிமுத்துவிற்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்து சிவரஞ்சனி தன் வீட்டில் விஷம் குடித்து மயங்கியுள்ளார்.

இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சிவரஞ்சனியை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிவரஞ்சனி  பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |