Categories
தேசிய செய்திகள்

PF சந்தாதாரர்களே…! இந்த வேலையை உடனே முடிங்க…. இல்லனா பணத்திற்கு ஆபத்து…!!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் தங்களது கணக்கில் ஒரு நாமினியை தேர்ந்தெடுத்து இருப்பது கட்டாயமாகும். நாமினி இல்லாவிட்டால் இறப்புக்குப் பின்னர் பென்சன்  உள்ளிட்ட பயன்கள் கிடைக்காமல் போய்விடும். பிஎஃப் பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அதனால் தான் உறுப்பினர்கள் அனைவரும் நாமினியை தேர்ந்தெடுக்கும்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கேட்டுக்கொண்டது. அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது.

ஏற்கனவே நாமினியை   தேர்ந்தெடுத்தவர்களும் புதிய நாமினியை அப்டேட் செய்யும் வசதி உள்ளது. புதிய நாமினியை அப்டேட் செய்ய எங்கும் அலைய தேவையில்லை. வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமாக செய்து முடிக்கலாம். யுஏஎன் நம்பர் இருந்தாலே போதும் அதை வைத்தே அப்டேட் செய்ய முடியும். pf உறுப்பினர்கள் EDLI  திட்டத்தின் கீழ் ஏழு லட்சம் வரையில் பயன்பெற முடியும். இந்த காப்பீட்டு தொகை அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.

அதனால் பிஎஃப் உறுப்பினர்கள் தங்களது நாமினியை அப்டேட் செய்வது மிகவும் அவசியமாகும். அப்படி அப்டேட் செய்யாவிட்டால் ரூபாய் 7 லட்சம் வரையிலான சலுகைகள் கிடைக்காமல் போகலாம். இந்த அப்டேட் செய்வதற்கு முன்னர் வாடிக்கையாளர்கள் ஒரு விஷயத்தை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது உறுப்பினர்களின் பிஎஃப் நம்பர், கணக்கு எண்,  ஆதார் கார்டு, போன்ற எந்த ஒரு ஆவணத்தையும் pf அமைப்பு போன் கால் வாயிலாகவும், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாகவும் கேட்பது இல்லை. எனவே இந்த விவரங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

Categories

Tech |