கடன் பிரச்சனையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புளியங்குளம் கிராமத்தில் கூலி தொழிலாளியான மாசானமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த கடனை திரும்பக் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாசானமுத்து தனது வீட்டில் வைத்து விஷத்தை குடித்து விட்டு தனது அண்ணன் வீட்டிற்கு பேருந்தில் சென்றுள்ளார்.
அப்போது திடீரென மாசனமுத்து பேருந்தில் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த மாசானமுத்துவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாசானமுத்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.