Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

வெளியான விஜய்யின் பீஸ்ட் ரிலீஸ் தேதி… கொண்டாடும் ரசிகர்கள்…!!!

பீஸ்ட் ரிலீஸ் தேதி விக்கிபீடியாவில் ஏப்ரல் 14 என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா உலகில் உச்சநட்சத்திரம் விஜய். இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹக்டே நடித்துள்ளார். இப்படத்திலிருந்து அண்மையில் யூடியூபில் வெளியான அரபிக் குத்து பாடலானது 125 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு சாதனை படைத்துள்ளது. பீஸ்ட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் விக்கிபீடியா ஏப்ரல் 14 எனக் குறிப்பிட்டிருப்பதை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை எனக் கூறினாலும் மகிழ்ச்சியில் உள்ளனர் ரசிகர்கள். மேலும் பீஸ்ட் திரைபடத்தின் ரிலீஸ் தேதியை கூடிய விரைவில் படக்குழு வெளியிட இருக்கின்றதாம். ரசிகர்களுக்காக படக்குழு ஏதோ ஒரு சர்ப்ரைஸை வைத்து இருக்கின்றதாம். ரசிகர்கள் பீஸ்ட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதிக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |