சென்னை மாநகரில் குடிநீர் வினியோகமானது 4 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான நீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது, சென்னையை அடுத்த மீன்சூர் காட்டுப்பள்ளியில் உள்ள கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று காலை 8 மணி முதல் 11ஆம் தேதி காலை 11 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே இதன் காரணமாக வடசென்னை பகுதியில் குடிநீர் வினியோகமானது நிறுத்த படுகிறது. இதை அடுத்து பொதுமக்களின் அவசர தேவைகளுக்காக லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ளுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு குடிநீரை பெற தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர் 8144930901, மணலி 8144930902, மாதவரம் 8144930903 & 044-45674567,044-28451300.