Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்… “பொதுமக்கள் வெளியேற்றத்தை ரஷ்யா தடுக்குது”…. ஜெலன்ஸ்கி பகீர் குற்றச்சாட்டு….!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யா மீது பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

உக்ரைன் மீது அபார பலம் கொண்ட ரஷ்யா போர்தொடுத்து 13 நாட்கள் ஆகியுள்ளது. ஆனால் ரஷ்யா போர் தொடுத்த 10 நாட்களிலேயே உக்ரேனிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும் வான், பீரங்கித் தாக்குதல் மற்றும் ஏவுகணை வீச்சு ஆகியவற்றை நடத்தி அப்பகுதிகளில் சீர்குலைய வைத்துள்ளது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்த இரு தரப்பு மோதலில் அப்பாவி பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளார்கள்.

இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய ராணுவம் மீது பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது உக்ரேன் மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்களை வெளியேற்றுவதை ரஷ்ய ராணுவம் தடுப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, ரஷ்யப் படைகள் மரியுபோல் நகருக்கு உணவு மற்றும் மருந்து கொண்டு செல்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சாலையை தகர்த்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |