கிரிமியாவை கைப்பற்றியதற்காக பதக்கம் வென்ற மூத்த ராணுவ அதிகாரியான ரஷ்ய மேஜர் ஜெனரல் போரில் கொல்லப்பட்டதாக உக்ரேன் உளவுத் துறை தலைமை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது அபார பலம் கொண்ட ரஷ்யா போர்தொடுத்து 13 நாட்கள் ஆகியுள்ளது. ஆனால் ரஷ்யா போர் தொடுத்த 10 நாட்களிலேயே உக்ரேனிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும் வான், பீரங்கித் தாக்குதல் மற்றும் ஏவுகணை வீச்சு ஆகியவற்றை நடத்தி அப்பகுதிகளில் சீர்குலைய வைத்துள்ளது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்த இரு தரப்பு மோதலில் அப்பாவி பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளார்கள்.
இவ்வாறு இருக்க ஹாஸ்டோமல் நகரின் மேயரான யூரிபுரைலிப்கோ ரஷ்ய போரால் பாதிக்கப்பட்டுள்ள தனது நகர மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை கொடுத்து உதவுவதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது ரஷ்ய வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் கொல்லப்பட்டுள்ளார். இது அனைவரிடத்திலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உக்ரேன் பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத் துறை தலைமை இயக்குனரகம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கிரிமியாவை கைப்பற்றுவதற்காக பதக்கம் வென்ற மூத்த ராணுவ அதிகாரியான ரஷ்ய மேஜர் ஜெனரல் ஜெராசிமோவ் போரில் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரேன் தெரிவித்துள்ளது.