போராட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் வைத்து பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது மக்களாட்சியை காப்போம் என்ற தலைப்பில் சேலம் மற்றும் தாம்பரத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஒற்றுமை அணிவகுப்பை தடைசெய்ததையும், அதன் உறுப்பினர்களை கைது செய்ததை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 20 -க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.