அமெரிக்காவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை, மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியானது, இந்தியா போன்ற இருபதுக்கும் அதிகமான நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், உலக சுகாதார மையமும் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியிருக்கிறது. எனினும், தற்போது வரை அமெரிக்கா இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கவில்லை.
அந்நாட்டில், கோவேக்சின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் இருந்த சமயத்தில் அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, கடந்த நவம்பர் மாதத்தில் இந்த பரிசோதனையை தடை செய்தது. கடந்த மாதத்தில் இந்த தடை விலக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு மையம், மீண்டும் கோவேக்சின் தடுப்பூசியை பரிசோதனை செய்ய அனுமதி வழங்கியிருக்கிறது.
இது தொடர்பில், பயோடெக் நிறுவனம் மற்றும் ஆகுஜன் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றன. அதில், அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு மையம், கோவேக்சின் தடுப்பூசியை பரிசோதனை செய்வதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.