Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காணாமல் போன தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாமி தோப்பு பகுதியில் உள்ள செட்டி விலையில் ராஜமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 5 மகன்கள் இருக்கின்றனர். இதில் ராஜமணியும் அவரது மனைவியும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டனர். இந்நிலையில் இவர்களுடைய 4-வது மகன் தங்க செல்வன் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சொந்தமாக  வீடு கட்டுவதற்காக கடன் வாங்கியுள்ளார். அதற்காக வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்துள்ளார். ஆனால் உரிய நேரத்தில் அவரால் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை.

இதனால் மிகுந்த வேதனையில் இருந்த தங்கசெல்வன் வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு தென்னந்தோப்பில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்  தென்தாமரைகுளம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தங்க செல்வனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |