Categories
மாநில செய்திகள்

#BREAKING: கோகுல்ராஜ் கொலை வழக்கு…. தூக்கு தண்டனை வழங்க வேண்டும்….. அரசு வழக்கறிஞர் பவானி பா.மோகன்…..!!!!!

சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூரில் கோகுல் ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவரும் நாமக்கல்லைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் நட்பாக பழகி வந்தனர். கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி கல்லூரிக்குச் போவதாக கூறிவிட்டு சென்ற கோகுல் ராஜ் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் கோகுல் ராஜூவை அவரின் பெற்றோர் தேட ஆரம்பித்தனர். அப்போது நாமக்கல் அருகேயுள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த கொடூர கொலையில் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவன தலைவர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இவ்வழக்கில் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் வாயிலாக தொடர்ந்து ஆடியோ மற்றும் வீடியோக்களை யுவராஜ் வெளியிட்டு வந்தார். அதன்பின் அவர் 11/10/2015 அன்று நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரண் அடைந்தார். இந்த வழக்கில் மேலும் 16 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். சாதி ஆணவப் படுகொலையான இச்சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இந்நிலையில் இவ்வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்ரியா திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். அதனை தொடர்ந்து கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு, முதன்மை அமர்வு கோர்ட்டில் 2018 ஆக..30ஆம் தேதி விசாரணை நடந்தது.
இவ்வழக்கில் மொத்தமாக 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். நாமக்கல் கோர்ட்டில் 72 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இவ்வழக்கு விசாரணை கடந்த 2019 மே 5-ம் தேதி முதல் மதுரை எஸ்சிஎஸ்டி சிறப்பு தனி நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதனிடையில் இந்த விசாரணையில் 116 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் வழக்கு விசாரணை முழுவதும் முடிவடைந்தது. இதனையடுத்து கோகுல்ராஜ் கொலை வழக்கில் மார்ச் 5ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி சம்பத்குமார் தெரிவித்தார். கடந்த 7 வருட காலமாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் 5-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதாவது பொறியியல் பட்டதாரி கோகுல் ராஜ் கொடூர கொலை வழக்கில் யுவராஜ், அருண், குமார், சங்கர், அருள்வசந்தம் செல்வகுமார், தங்கதுரை (யுவராஜின் சகோதரர்), சதீஸ்குமார், ரகு என்கிற ஸ்ரீதர், ரஞ்சித் போன்ற 10 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி அறிவித்தார். இவர்களுக்கான தண்டனை விபரம் இன்று மார்ச்-8ம் தேதி வெளியிடப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.  மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத் குமார் இன்று காலை 11 மணிக்கு குற்றவாளிகள் 10 பேருக்கும் உள்ள தண்டனை விபரங்களை அறிவிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தற்போது கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனை விவரம் இன்று (மார்ச்.8)  பிற்பகல் அறிவிக்கப்படும். இருதரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில் பிற்பகலில் தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படும் என்று மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. யுவராஜ், யுவராஜின் கார் ஓட்டுநர் அருண், குமார் என்ற சிவக்குமார், சதீஷ்குமார், ரகு என்கின்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் போன்ற 10 பேருக்கும் தண்டனை அறிவிக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்க வேண்டுமென வாதிட்டுள்ளோம் என்று அரசு வழக்கறிஞர் பவானி பா.மோகன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |