Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு வந்த மகன்…. சடலமாக தொங்கிய தந்தை…. போலீஸ் விசாரணை…!!

ஆட்டோ ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் இருக்கும் வடக்கூரில் ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ஐயப்பன் உடல்நலக்குறைவால் சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அவரது மனைவி மற்றும் மகன்கள் வேலைக்கு சென்றுள்ளனர். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த அய்யப்பன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து ஐயப்பனின் மகன் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது ஐயப்பன் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஐயப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |